ஹன்சிகா மோத்வானியின் சிங்கிள் ஷாட் திரைப்படம் !!
ஹன்சிகா மோத்வானியின் சிங்கிள் ஷாட் திரைப்படம் !!
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, 2004-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தேசமுத்ரூ’ என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தாண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஃப்லிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.
தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார். அதை தொடந்து குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ஹிட் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது இவர் நடித்துள்ள 50-வது படமான ‘மகா’ ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் இவர் கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற் பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார்.ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.
இந்நிலையில் ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
“105 மினிட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள ஹன்சிகா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபடவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்த படம் படைக்கவுள்ளது.
மேலும் இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தின் தலைப்பான “105 மினிட்ஸ்” தான் படத்தின் நீளமும். 105 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் உண்மையான நேரமும் படத்தின் கதை நேரமும் ஒன்றே என அறிவித்துள்ளனர்.
newstm.in