ஹேப்பி நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!!

ஹேப்பி நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!!

Update: 2022-01-28 07:35 GMT

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள லால்பாக் மைதானத்தில், முதலமைச்சர் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், குடியரசு நாளை ஒட்டி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார்.

அதில், அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது என அதிரடியாக அறிவித்தார்.

ஓய்வூதிய திட்டத்தில், மாநில அரசின் பங்களிப்பு, 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறு வணிக நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், போக்குவரத்துத் துறையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து வசதி மையங்கள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான நடவடிக்கையாக, அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுவப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

newstm.in

Similar News