ஹேப்பி நியூஸ்!! ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை

ஹேப்பி நியூஸ்!! ஒரே நாளில் ரூ.560 குறைந்த தங்கம் விலை

Update: 2021-03-12 18:26 GMT

கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் உள்ளனர்.இந்நிலையில், தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு குறைந்ததில் இருந்து தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.33,680-க்கு விற்பனையான நிலையில் மீண்டும் மாலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.33,440-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் ரூ.4,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,700 ரூபாய் குறைந்து ரூ.71,500-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து  ரூ.70,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News