குட் நியூஸ்! இனி, இரவிலும் தாஜ்மஹாலை பார்க்கலாம்!

குட் நியூஸ்! இனி, இரவிலும் தாஜ்மஹாலை பார்க்கலாம்!

Update: 2021-08-20 18:50 GMT

பகல் நேரத்தில் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்ட தாஜ்மஹாலை, வரும் 21ம் தேதி முதல் இரவு நேரத்திலும் சென்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை அடுத்து, கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் பகல் நேரத்தில் மட்டும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.


இந்நிலையில், வரும் 21ம் தேதி முதல் இரவு நேர பார்வைக்காக தாஜ்மஹால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ண்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது;

“தாஜ்மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வரும் 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மஹால் மூடப்படும். ஊரடங்கு என்பதால் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மூடப்படுகிறது.


உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இரவு எட்டரை மணியில் இருந்து பத்து மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக இந்தியர்களுக்கு 510 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News