இந்திய கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1998இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் கிரிக்கெட்டைத் தொடங்கிய ஹர்பஜன், கடைசி டெஸ்ட் போட்டியை 2015இல் இலங்கைக்கு எதிராக ஆடினார். 1998இல் ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269 சர்வதேச டி20 போட்டிகளில் 25 என்று 700 விக்கெட்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். 13 ஐபிஎல் சீசன்களில் 163 மேட்ச்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு யுஏஇக்கு எதிராக டாக்காவில் டி20 சர்வதேச போட்டியில் ஆடினார். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆர்சிபி அணியுடன் சென்னையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விளையாடினார்.
இந்நிலையில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டை விட்டு நான் விடைபெறுகிறேன்.
இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாக்கிய அனைவருக்கும் என் நன்றிகள். என் இதயம் கனிந்த நன்றிகள் அனைவருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU
newstm.in