’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட பஞ்சாப் பையன் ஹர்பஜன் சிங்..!
’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட பஞ்சாப் பையன் ஹர்பஜன் சிங்..!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் வீடியோ இணையதளங்களில் பலரையும் கவரிந்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.
கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி காம்மிங்’ பாடலின் ஆடியோ வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.
அண்மையில் சென்னையில் நடந்த இங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் இன்னிங்கிஸில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது கிரவுண்டில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஸ்வின் இந்த நொடிகள் இந்த பாட்டுக்கு ஆடினார்.
அதுவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தவராக இருந்தாலும், தமிழகத்தின் குத்து டான்ஸ் ஸ்டைலை அச்சுஅசலாக அப்படியே வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன்.
There is no stopping of #VaathiComing now @harbhajan_singh dance video is out from his insta page 😍😍😍 @actorvijay #master #thalapathy65 pic.twitter.com/FntXTZ8R1E
— VijayBalaji Vfc ❤️ (@Balaji_Vfc_On) March 1, 2021
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவருடைய நடனத்திற்கு ரசிகர்களாக மாறி வருகிறார்கள். மேலும், ஹர்பஜன் முதல்முறையாக சினிமாவில் நடித்துள்ள ‘ஃபிரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதை தொடர்ந்து தற்போது அவர் வாத்திங் கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இருவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.