ராம்தேவின் கொரோனில் மருந்துக்கு அனுமதி.. ஹரியானா பாஜக அரசு முடிவால் அதிருப்தி !
ராம்தேவின் கொரோனில் மருந்துக்கு அனுமதி.. ஹரியானா பாஜக அரசு முடிவால் அதிருப்தி !
கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் கடுமையாக போராடி வருகிறது. ஆனால் அன்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குழு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவ முறை காலாவதியானது மற்றும் முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். கொரோனாவால் இறப்பதைவிட இந்தியாவில் அலோபதி மருத்துவ முறையால் இறப்பவர்கள்தான் அதிகம் என்று அவர் பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த மருத்துவ சங்கங்கள் அவர் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தன. இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரது கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதன் பின்பு தமது கருத்தை ராம்தேவ் திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி இருந்தார். மேலும் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாபா ராம்தேவ் நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்தை விநியோகிக்க ஹரியானா மாநில அரசு முடிவு முடிவு செய்துள்ளது. ஹரியினாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சாமியார் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி ஆயுர்வேத்' நிறுவனம் தயாரித்த 'கொரோனில்' மருந்து ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை வழங்குவதற்கான பாதி செலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கோவிட் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்த கொரோனில் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என்று கூறி அறிமுகம் செய்த பதஞ்சலி நிறுவனம், பின்னர் அது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்கான மருந்து என்று கூறியது. இந்த நடவடிக்கைக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்தும் முறையாக தெரியவில்லை எனவும் பலரும் கூறி வருகின்றனர்.
newstm.in