மருத்துவமனையின் பெயரையே கெடுத்துவிட்டார்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு வேண்டும் !!
மருத்துவமனையின் பெயரையே கெடுத்துவிட்டார்.. ரூ.5 கோடி நஷ்ட ஈடு வேண்டும் !!
பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி வரும் நடிகை ரைஸாவிடம் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு மருத்துவர் பைரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை ரைஸா மற்றும் சரும நிபுணர் பைரவி செந்திலுக்கு இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறிப்பிட்ட முகப்பொலிவு சிகிச்சையின் போது கண்ணுக்கு கீழ் வீக்கம் ஏற்பட்டதாகவும், அந்த சிகிச்சையை பைரவி செந்தில் வலுக்கட்டாயமாக அளித்ததாகவும் நடிகை ரைஸா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர் பைரவி செந்தில், இந்த சிகிச்சையின் போது இப்படிப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பு தான் என ரைஸாவுக்கு முன்பே விளக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக அவரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்றதாகவும் தெரிவித்தார் பைரவி.
ஆனால் அதற்கு நோட்டீஸ் விட்ட நடிகை ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை அடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பைரவி செந்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
அதில், ரைஸாவுக்கு இதே சிகிச்சை 3 முறை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையால் முகம் வீக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் அது ஒன்று இரண்டு நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும். அதற்காக அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அதை செய்யாமல், எங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் ரைசா செயல்பட்டு வருகிறார். இதற்காக அவரிடம் ரூ. 5 கோடி நஷ்டு ஈடு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பைரவி செந்தில் தெரிவித்தார்.
இதற்கு நடிகை ரைஸாவிடம் இருந்து உரிய விளக்கம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
newstm.in