“ஆரோக்கியமே முக்கியம்” : பொங்கல் வாழ்த்துடன் ரஜினி அட்வைஸ்!!

“ஆரோக்கியமே முக்கியம்” : பொங்கல் வாழ்த்துடன் ரஜினி அட்வைஸ்!!

Update: 2022-01-15 06:15 GMT

ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே இல்லை என்ற அறிவுரையுடன் நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர்கள் மிகவும் உற்சாகமாக நேற்று தைப் பொங்கள் திருநாளை கொண்டாடினர். இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பச்சரிசி இட்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் தை முதல்நாளை கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவரது போயஸ் கார்டன் வீட்டு வாசலுக்கு வந்த அவர் காத்திருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தை கூறினார்.

அதனைத் தொடர்ந்து ட்விட்டரிலும் தனது பொங்கல் வாழ்த்தை பதிவிட்டிருந்தார். அதில், எல்லாருக்கும் வணக்கம், கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு.

எல்லா கட்டுப்பாடுகளையும் கடைபிடிங்க. ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்எனத் தெரிவித்துள்ளார்.


newstm.in

Similar News