நெஞ்சை பிளக்கும் சோகம்.. 5 வயது சிறுவனுக்கு இப்படியொரு கொடூரமா !!

நெஞ்சை பிளக்கும் சோகம்.. 5 வயது சிறுவனுக்கு இப்படியொரு கொடூரமா !!

Update: 2021-12-19 10:28 GMT

சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் சிறுவனின் சடலம் கிடந்தது விழுப்புரம் பகுதி மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடலை மீட்ட காவல்துறையினர் யாரும் கொலை செய்து வீசிச்சென்றனரா என விசாரணை நடத்தினர். ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல் நெஞ்சை பிளக்கும் அளவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில், சிவகுரு என்பவர் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்துவருகிறார். கடந்த 15ஆம் வழக்கம்போல் பணிக்கு சென்றப்போது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்துள்ளார். சிறுவனை தட்டி எழுப்ப முயன்றப்போது அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சியடைந்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

 

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையில் உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த குழந்தை உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் இறந்து இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது யாருடைய குழந்தை என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரதான நகரில் ஒரு குழந்தை உணவு, தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த சோகம் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

newstm.in

Similar News