இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை! 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!
இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை! 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!
வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு பெற்றுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அக்னிக்கு முன்பாகவே வெயில் வெளுத்து வாங்குகிறது. சில மாவட்டங்களில், வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. வெப்பத்தின் அளவு மேலும் சில டிகிரிகள் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், இந்த மழை செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
தென்காசி, போடி, செங்கோட்டை, ஆயக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும், 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில், வானம் அடுத்த 48 மணிநேரத்திற்கு தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், இன்றும் நாளையும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
newstm.in