சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை!
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு விட்டு மழை பெய்கிறது.
குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த மழையின்போது சேதமடைந்த சாலைகளில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால், அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
ஒரு சில சாலைகளில் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்தனர். இதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
newstm.in