போலி பான் கார்டை கண்டுபிடிக்க இதோ எளிமையான வழி!!
போலி பான் கார்டை கண்டுபிடிக்க இதோ எளிமையான வழி!!
பணப் பரிவர்த்தனை, வருமான வரி போன்றவற்றிற்கு பான் கார்டு மிக முக்கியமான ஆவணம். வரி மோசடிகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற பல்வேறு விஷயங்களில் பான் கார்டை இணைப்பது கட்டாயம். அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள பான் கார்டை வைத்தே நிறைய மோசடிகள் நடைபெறுகின்றன.
போலியான பான் கார்டுகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு ஒருவேளை போலியானதாகக் கூட இருக்கலாம். அதை எப்படி கண்டுபிடிப்பது?
பான் கார்டு குறித்து ஆன்லைன் மூலமாகவே கண்டுபிடிக்கலாம். ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும். பான் கார்டில் உள்ள QR code மூலமாக அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடியும்.
கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் PAN QR code Reader என்ற மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளவும்.
இந்த ஆப் ஓப்பன் செய்தவுடன் பச்சை நிற பிளஸ் குறியீட்டுடன் கேமரா ஓப்பன் ஆகும்.
கேமராவில் உங்களுடைய பான் கார்டை காட்டி, அதிலுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்யவும்.
ஸ்கேன் ஆனவுடன் பான் கார்டு தொடர்பான விவரங்கள் காண்பிக்கப்படும்.
உங்களுடைய பான் கார்டில் உள்ள விவரங்களும் மொபைல் ஆப்பில் வந்த விவரங்களும் சரியாகப் பொருந்தினால் உங்களுடைய பான் கார்டு ஒரிஜினல்தான்.
ஒருவேளை தகவல்கள் வேறுபட்டு இருந்தால் நீங்கள் வேறொரு பான் கார்டு வாங்குவது நல்லது. வருமான வரித் துறை வெப்சைட்டிலேயே அதற்கான வசதி உள்ளது.
newstm.in