இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு - இதுதான் தமிழ்நாடு!

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மத ரீதியாக வெறுப்பு விதைக்கப்படும் இன்றைய சூழலில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இணையத்தில் பலரும் இதுதான் தமிழ்நாடு, பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு பெருமிதப்படுகின்றனர்.

Update: 2020-03-01 02:45 GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றும் வரும் தொடர் போராட்டத்தின் போது இந்து பெண் ஒருவருக்கு இஸ்லாமிய பெண்கள் வளைகாப்பு நடத்தி வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இஸ்லாமிய பெண்கள் பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்கு வளையல் அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வளைகாப்பு நிகழ்வின் போது, வழங்கப்படுகின்ற தாம்பூலப் பைகளிலும் ‘இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான்’ என்றும், ‘நோ சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மத ரீதியாக வெறுப்பு விதைக்கப்படும் இன்றைய சூழலில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இணையத்தில் பலரும் இதுதான் தமிழ்நாடு, பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு பெருமிதப்படுகின்றனர்.
 
newstm.in

Tags:    

Similar News