5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று சாதனை.. இதுவரை ரூ.1000 கோடி பறிமுதல் !!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று சாதனை.. இதுவரை ரூ.1000 கோடி பறிமுதல் !!

Update: 2021-04-16 19:58 GMT

இந்தியாவில் நடக்கும் 5 மாநில தேர்தல்களில் ரூ. 1000 கோடி பறிமுதல் செய்து வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மேற்குவங்கம் மாநிலத்தில் மட்டும் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் பணிகளின் போது இந்தியத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணம் உள்ளிட்ட இதர விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை 5 மாநிலங்கள் முழுவதும் ரூ.1001.4 கோடி மதிப்பிலான பணம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்தப் பட்டியலில் வழக்கம்போல் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. மாநிலம் முழுவதும் ரு.446.28 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடியும், அசாமில் ரூ.122.32 கோடியும், கேரளத்தில் ரு.84.91 கோடியும், புதுச்சேரியில் ரூ.36.95 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News