ஹோலி கொண்டாட்டம் முடங்கியது!! கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் பீதி!
ஹோலி கொண்டாட்டம் முடங்கியது!! கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் பீதி!
உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்நிலையில், இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதுமே முடங்கியது. இந்தியாவையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் எழுந்துள்ள பீதி, ஹோலி கொண்டாட்டங்களை சீர்குலைத்துள்ளது.
தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர் துப்பாக்கிகள், பொம்மைகள் விற்பனைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இன்னொரு பக்கம் வழக்கமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறும். இந்த வருடம் நட்சத்திர ஹோட்டல்களிலும் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன். ஹோலி கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தும் பொம்மைகள், தண்ணீர் துப்பாக்கிகள் என இதுவரையில் 80 சதவீதம், இதுவரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையாக இருந்து வந்தன. இந்நிலையில், கொரானா பீதியால், சீன பொம்மைகள் விற்பனை முழுமையாக முடங்கி விட்டன.
newstm.in