தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!?

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!?

Update: 2021-03-23 12:58 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்தாண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சென்ற கல்வியாண்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைப்பெற்று வந்தன. கொரோனா பரவல் தடுக்கப்பட்ட நிலையில், 9ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களிலும் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின், தமிழகத்தில் 11ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தேர்வுகள் ஏதுமில்லாமல் தேர்ச்சியடைவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, மீண்டும் கடந்த  2 மாதங்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு ஆயிரத்தை எட்டி உள்ளது.  இன்று முதல் தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், ஆன்லைனில் பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் 12ம் வகுப்பு மாணவர்களை அச்சத்துடன் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். எனவே 12ம் வகுப்பிற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News