இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

Update: 2021-12-20 05:30 GMT

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

இந்நிலையில், நேற்று 19-ம் தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா இன்றும் 20-ம் தேதியும் நடக்கிறது.

ஆருத்ரா தரிசன நிகழச்சியை முன்னிட்டு, இன்று 20-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய, வரும் ஜனவரி 8-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News