ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் காலமானார் !
ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் காலமானார் !
ஹாரி பாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தவர் பால் ரிட்டர் (வயது 54). ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலஸ் படத்திலும் பால் நடித்துள்ளார்.இங்கிலாந்து நாட்டு நடிகரான பால், கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த ஹாரி பாட்டர் பட வரிசையில் எல்டிரட் வார்ப்பிள் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.இதற்கென பால் ரிட்டர், தொடர்ந்து தமது மூளைக் கட்டியை சரிசெய்ய சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த திங்கட்கிழமை பால் ரிட்டர் பரிதாபகரமான நிலையில் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், பால் தனது வீட்டில் மனைவி பாலி மற்றும் மகன்கள் பிராங்க் மற்றும் நோவா ஆகியோர் உடனிருக்கும்பொழுது அமைதியான முறையில் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பிரைடே நைட் டின்னர் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வந்துள்ளார். அவரது மறைவுக்கு உலகத் திரை உலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.