கொடுமை! 62 வயது எம்.பி.க்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம்!!
கொடுமை! 62 வயது எம்.பி.க்கும் 14 வயது சிறுமிக்கும் திருமணம்!!
பாகிஸ்தானில் அந்நாட்டு எம்.பி சலாவுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எம்.பி.யின் வயது 62.
இந்த புகாரை பெண்களின் நலனுக்காக பணியாற்றிவரும் தன்னார்வ காவல்துறையிடம் அளித்து ள்ளது. விசாரணையில் அந்த சிறுமி பள்ளியில் படித்து வருகிறார் என தெரியவந்துள்ளது.
2006ஆம் ஆண்டில் பிறந்த அச்சிறுமி பாகிஸ்தான் சட்டப்படி திருமண வயதை எட்டவில்லை. ஆனாலும் சட்ட விரோதமாக அயூபி அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்திய போது, அவர் இதனை மறுத்துள்ளார். அதனால் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in