கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?
கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?;
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி சாதாரண சளி, இருமல் , காய்ச்சல் இவையே கொரோனாவின் அறிகுறிகள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் இயல்பாகவே காணப்படுவர். பெரும்பாலும் 80% மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படாமலேயே நோய்த்தொற்றிலிருந்து விடுபடுகின்றனர்.
6ல் ஒரு நபர் மட்டுமே நோய் தீவிரம் அடைந்து உயிரிழக்கின்றனர். இறுதியாக சுவாசப் பாதையில் நுரையீரலுக்கும், வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று செல்லும் பாதையை வைரஸ் அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் உருவாகும்.
மெல்ல, மெல்ல நரம்புகளிலும் பிரச்னைகளை உருவாக்கி தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். முடிவில் நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள காற்றுப் பைகளுக்குச் சென்று வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு உருவாகி மற்ற உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் குறையத் தொடங்கும்.
உடலின் அனைத்து செல்களிலும் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்ச ஆரம்பித்து குறிப்பிட்ட ஒரு நிலையில் தான் மரணம் ஏற்படுகிறது.