நடிகர் ராமராஜன் உடல் நிலை எப்படி உள்ளது? வெளியான பரபரப்பு விளக்கம் !!
நடிகர் ராமராஜன் உடல் நிலை எப்படி உள்ளது? வெளியான பரபரப்பு விளக்கம் !!
நடிகர் ராமராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு, அவரது தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1980களில் தமிழில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் நடிகர் ராமரஜான். அவருக்கு என்று இன்றளவும் ரசிகர்கள் பட்டாலம் உள்ளது. பின்னர் அதிமுகவில் சேர்ந்த அவர் நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன்பின்னர், நீண்ட காலமாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில், ராமராஜன் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"வதந்திகளை நம்ப வேண்டாம் -
வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த 'கரகாட்டக்காரன்' படம் மட்டுமல்ல, பல நூறு நாட்கள் படங்களை தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் நாயகன் ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பிவருகிறார்கள். திரு.ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்துகொள்வார்" என குறிப்பிட்டுள்ளனர்.
newstm.in