திருப்பதி கோவிலில் கடந்த ஒரு மாத காணிக்கை எவ்வளவு தெரியுமா?
உலகில் அதிக அளவில் காணிக்கை குவியும் ஆன்மீக தலம் திருப்பதி ஏழுமலையான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துகின்றனர். கடந்த மாதத்திற்கான காணிக்கை தொகையை திருப்பதி தேவஸ்தானம் தெரிவி்த்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
உலகில் அதிக அளவில் காணிக்கை குவியும் ஆன்மீக தலம் திருப்பதி ஏழுமலையான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த மாதத்திற்கான காணிக்கை தொகையை திருப்பதி தேவஸ்தானம் தெரிவி்த்துள்ளது.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 82 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
newstm.in