முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக்கூடாது...? பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு வீடியோ !!

முகக்கவசத்தை எப்படியெல்லாம் அணியக்கூடாது...? பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு வீடியோ !!

Update: 2021-06-08 10:06 GMT

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா 2-ம் அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. அரசு தரப்பிலும், திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வுப் பிரசார வீடியோக்களைத் வெளியிட்டு வருகிறார்கள்.

அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்போது திரைப்பிரபலங்களுடன் இணைந்து முகக்கவசம் முறையாக எப்படி அணிய வேண்டும், எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

இந்த குறும்படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா, சதீஷ், யோகிபாபு, சந்தீப் கிஷன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூலேகா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகள் வரலட்சுமி தன் நண்பர்களுடன் இணைந்து உயிர் காக்கும் முகக்கவசம் முறையாக எப்படி அணிய வேண்டும், தவறுதலாக எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து தயாரித்துள்ள விழிப்புணர்வு குறும்படம், அனைவரின் பார்வைக்காக! முறையாக முகக்கவசம் அணிவோம்! பாதுகாப்பாக இருப்போம்!” என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News