மனித மண்டையோடு, எலும்புத் துண்டுகளை வீசினார்.. ஒருதலைக்காதலால் இளம்பெண் கடத்தல்!!

மனித மண்டையோடு, எலும்புத் துண்டுகளை வீசினார்.. ஒருதலைக்காதலால் இளம்பெண் கடத்தல்!!

Update: 2020-03-02 14:20 GMT

ஒருதலையாகக் காதலித்த பெண்ணை சினிமா பாணியில் உதவிப் பேராசிரியர் கடத்திச் சென்றுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் உயர்கல்வி படித்து வருகிறார். அந்த பெண் படித்த கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்து விட்டு, தற்போது கடப்பா மாவட்டம் பகீர் பள்ளியில் வார்டு செயலாளராக இருப்பவர் கிருஷ்ண மோகன். அவர் அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். கிருஷ்ண மோகன் அவ்வப்போது பெங்களூருவிற்கு சென்று அடிக்கடி சென்று அந்தப் பெண்ணிடம் தன் காதலைக் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்தார்.

அந்தப் பெண் அவரது காதலை ஏற்க மறுத்து பெற்றோரிடம் கூறவே, அவரை கடப்பாவிற்கே அழைத்து சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ண மோகன், புர்கா அணிந்து ஒரு பெண் போல அந்த வீட்டிற்குள் சென்றார். பின்னர் அந்தப் பெண்ணை மிரட்டி வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரைத் திறந்து விட்டார். கையோடு கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில்களில் இருந்த பெட்ரோலை வீடு முழுவதும் ஊற்றி விட்டார்.

பின்னர் மனித மண்டையோடு, எலும்புத் துண்டுகளை ஆங்காங்கே வீசினார். அதையடுத்து, அந்தப் பெண்ணை கட்டாயமாக புர்கா அணிவித்து தனது காரில் ஏற்றிக் கடத்திச் சென்றார். இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்னர். அவர்கள் அளித்த புகாரையடுத்து செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாணையை துரிப்படுத்தின. அதன்படி வேலுாரில் பதுங்கியிருந்த கிருஷ்ண மோகன் கைது செய்து, இளம்பெண்ணை அவரிடம் இருந்து மீட்டனர். 

கிருஷ்ணமோகனிடம் நடத்திய விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் அந்தப் பெண் எரிந்து விட்டார் என வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காக அப்படி செட்டப் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். பெண் கடத்தப்பட்ட 2 மணிநேரத்தில் அவரை போலீசார் அதிரடியாக மீட்டனர்.   

newstm.in

Tags:    

Similar News