போர் முனையில் மனிதாபிமானம்.. ஓய்வுபெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் !!

போர் முனையில் மனிதாபிமானம்.. ஓய்வுபெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் !!

Update: 2021-06-04 10:08 GMT

இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது.

கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல். இந்தக் கப்பல் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட ஆப்ரேஷன் பவனில், ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இணைக்கப்பட்டது. இப்பணியில் ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுனாமியால் பேரழிவு ஏற்பட்டபோதும், மனிதாபிமான நடவடிக்கைளுக்கு இந்தக் கப்பல் உறுதுணையாக இருந்தது. இந்த மதிப்புமிக்க செயல்பாட்டை கொண்ட ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வுபெறுகிறது. 

அதாவது 40 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டு ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்று ஓய்வு பெறுகிறது என அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் எளிய முறையில் நடைபெறுகிறது.

வழக்கமாக பெரும்விழா கொண்டாடப்பட்டு போர்க்கப்பல்கள் ஓய்வுபெறும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா நடைமுறை காரணமாக எளிமையாக விழா நடைபெறவுள்ளது.


newstm.in

Tags:    

Similar News