மகன் இறந்த 15 நாளில் கணவரும் கொரோனாவால் பலி! நடிகைக்கு தொடரும் சோகம் !!
மகன் இறந்த 15 நாளில் கணவரும் கொரோனாவால் பலி! நடிகைக்கு தொடரும் சோகம் !!
நடிகை கவிதா தனது எதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். பல திரைப்படங்களில் அம்மா ரோலில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதோடு ஆந்திராவில் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கவிதா நடித்து வருகிறார். மேலும் பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், அம்மாவாகவும் நடித்து வரும் நடிகை கவிதா, நீடித்து வரும் கொரோனாவால் சிறிது காலம் விலகி இருந்து வருகிறார். அதாவது கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கியதுமே, ஷூட்டிங்கிற்கு பிரேக் எடுத்து விட்டு ஐதராபாத்தில் வீட்டோடு இருந்து வந்தார்.
இந்த நிலையில், கொரோனாவுக்கு தனது மகனை இழந்து சோகத்தில் நடிகை கவிதா மூழ்கினார். நடிகை கவிதா அவரது கணவர் மற்றும் மகனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மகன் சாய் ரூப்வை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த 15ஆம் தேதி சாய் ரூப் உயிரிழந்தார்.
இதனையடுத்து நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜும் கொரோனாவால் உடல்நலப்பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்து விட்டார். பதினைந்து நாள்களுக்குள் நடிகை கவிதா இரண்டு உயிரை கொரோனாவுக்குப் பலி கொடுத்திருக்கும் சம்பவம் ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
நடிகை கவிதா கணவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in