சொத்து தகராறில் இளம்பெண்ணை நடுரோட்டில் வாளால் சரமாரியாக வெட்டி 2ஆவது கணவர் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா ரெட்டி (40), திருமணம் முடிந்து கணவர், ஒரு மகனுடன் வசித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.  இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டிக்கும், நவீன் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் நெருங்கி பழகியதால், காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவில் அர்ச்சனா ரெட்டிக்கு ஏராளமான சொத்துகள் உள்ளது. அந்த சொத்துகளில் பாதியை தனக்கு பிரித்து தர வேண்டும் என்று அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு அர்ச்சனா ரெட்டி மறுத்து விட்டார். இதுதொடர்பாக நவீன்குமாருக்கும், அர்ச்சனா ரெட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த தகராறில் அர்ச்சனா ரெட்டி நவீன்குமாரையும் அண்மையில் பிரிந்தார். பின்னர் தனது மகனுடன் பெல்லந்தூரில் வசித்து வந்தார். ஆனாலும் சொத்து விஷயத்தில் அர்ச்சனா ரெட்டியிடம், நவீன்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஜிகனியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அர்ச்சனா ரெட்டி காரில் பெல்லந்தூரில் இருந்த ஜிகனிக்கு சென்றார். தேர்தலில் வாக்களித்துவிட்டு பெல்லந்தூருக்கு அர்ச்சனா ரெட்டி சென்றார். வழியில் காரை நிறுத்திய நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்தனர். 

பின்னர் நடுரோட்டில் அர்ச்சனா ரெட்டிைய நவீன்குமார், அவரது நண்பரும் வாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அர்ச்சனா ரெட்டி பரிதாபமாக இறந்தார். பின்னர் நவீன்குமார், அவரது நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனை்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் அர்ச்சனா ரெட்டியை நவீன்குமார், அவரது நண்பர் சேர்ந்து வாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட நவீன்குமார், அவரது நண்பர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். 

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டி கொலை செய்யப்பட்ட காட்சிகளை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெஞ்சை பதறவைக்கிறது.  

newstm.in

 

Tags: