செல்ஃபோன் வாங்கிய மனைவியை கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற கணவன்!!

செல்ஃபோன் வாங்கிய மனைவியை கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற கணவன்!!

Update: 2022-01-25 07:00 GMT

அனுமதி இல்லாமல் செல்போன் வாங்கிய மனைவியை கணவன் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க தலைவர் கொல்கத்தா புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஜா என்பவரின் மனைவி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அவர் தனக்கு ஒரு செல்போன் வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் டியூஷன் எடுத்ததில் கிடைத்த பணத்தைக் கொண்டு செல்போன் வாங்கியுள்ளார். இதனை அறிந்த ராஜேஷ் ஜா ஆத்திரமடைந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தனது பேச்சை கேட்காததால் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்தபோது கூலிப்படையினர் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூலிப்படையினரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மனைவியை கணவனே கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து கணவன் ராஜேஷ் ஜாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமல் செல்போன் வாங்கியதால் மனைவியை கூலிப்படை ஏவி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News