இடைஞ்சலாக இருந்த கணவர்.. சமையலறையில் தோண்டியப்போது கிடைத்த சடலம்! பெண் கைது!

இடைஞ்சலாக இருந்த கணவர்.. சமையலறையில் தோண்டியப்போது கிடைத்த சடலம்! பெண் கைது!

Update: 2021-06-03 14:16 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா உள்ளது. தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் அங்கு நடந்த சம்பவம் ஒன்று நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தஹிசர் சாவல் பகுதியிலுள்ள ராவால்பாடாவைச் சேர்ந்தவர் ராயிஸ் ஷாயிக். 

ராயிஸ் ஷாயிக் - ஷாகிதா தம்பதிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷாயிக் கடந்த மே 21ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஷாகிதா போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது, ஷாகிதாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்துவரும் அமித் விஷ்வகர்மா என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. ராயிஸ் ஷாயிக் காணாமல் போனபின்னர் மே 21ஆம் தேதிக்கு பிறகு அமித்தும் காணாமல் போனதை விசாரணையில் கண்டுபிடித்தனர். இதனால் ஷாகிதா மீது சந்தேகம் அடைந்த போலீசாரிடம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே போலீசார் அவருடைய வீட்டை சோதனையிட்டிருக்கின்றனர்.

சோதனையின்போது ஷாகிதா வீட்டு கிச்சனில் புதிதாக டைல்ஸ் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், டைல்ஸ்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை தோண்டியதில் அங்கு சாக்குப்பையில் சடலம் இருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர். இதுகுறித்து ஷாகிதாவிடம் விசாரணையை முடுக்கியபோது, அவர் தனது காதலன் அமித்துடன் சேர்ந்து கணவனை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ‘

தானும்- அமித்தும் கள்ளக்காதலில் இருந்ததாகவும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுப்பவித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு தடை விதித்ததால் கணவரை அமித்தின் உதவியுடன் உடலை சாக்குப்பையில் கட்டி, சந்தேகம் வராமல் இருக்க கிச்சன் டைல்ஸை எடுத்து அடியில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷாகிதா கொடுத்த வாக்குமூலத்தை வைத்து அவரை கைதுசெய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அமித்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

newstm.in
 

Tags:    

Similar News