இரவில் தனிமையில் இருந்த கணவன் - மனைவி.! உள்ளே புகுந்த பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்.!
இரவில் தனிமையில் இருந்த கணவன் - மனைவி.! உள்ளே புகுந்த பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் மற்றும் வெங்கடேசன். சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழக்க, இதற்கு சகோதரனின் குடும்பமே காரணம் என அவரது மனைவி சித்ரா கூறிவந்தார். மேலும் அவர்கள் மேல் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முருகேசனின் மனைவி விஜயாவிற்கும் சித்ராவுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகேசன் அவரது மனைவி விஜயா ஆகியோர் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அரிவாளுடன் சித்ரா வீட்டில் புகுந்துள்ளார்.
அப்போது முருகேசனின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே முருகேசன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும், முருகேசனின் மனைவி விஜயாவையும் சரமாரியாக வெட்டிய சித்ரா அங்கிருந்து தப்பியுள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு பதுங்கியிருந்த சித்ராவை கைது செய்தனர்.
முருகேசனின் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பலத்த காயங்கள் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் இறந்த முருகேசனின் மனைவி விஜயாவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in