மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் நான்! விஜய் சேதுபதி ஆவேச பேட்டி!
மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் நான்! விஜய் சேதுபதி ஆவேச பேட்டி!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்கள் 3,998பேர். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று காலை முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகினர், அரசியல் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனவரும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தமது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மதியம் 2 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது ஓட்டினை பதிவு செய்தார் . அதன்பின் பேசிய விஜய் சேதுபதி, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான் . சாதி, மத உணர்வினை தாண்டி வாக்களிக்க வேண்டும். மனிதர்கள் தான் முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளார்.