சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை.. நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு..
சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை.. நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு..
தஞ்சாவூரில் படித்து வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கியிருந்த போது தற்கொலை செய்து கொண்டார்
மாணவியை மதம் மாற வற்புறுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர் ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவி உறவினர்கள், பாஜகவினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. ஆனால், இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இதற்கு பின்பு அவர்கள் ஆட்சி நீடிக்காது என தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் சட்ட மன்றத்தில் மக்கள் பிரச்சனையை பாஜக தான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்கட்சியாக இல்லாமல் இருந்தாலும், ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என்றார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுகவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Newstm.in