நாடு முழுவதும் நேற்று மத்திய அரசு வெளியிட்ட தகவல்படி ஒரே நாளில் புதிதாக 68,020 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் 291 பேர் உயிரிழந்தனர். தற்போது நாடு முழுவதும் 35,498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மொத்தம் 1.2 கோடி பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 தொடங்கி தற்போதுவரை 1,61,843 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் கொரோனாவின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.5 சதவீதமாக உள்ளது.

இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாநிலம் என்றால் அதில் ஆரம்பத்தில் இருந்தே மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 40,144 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. 108 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பல நகரங்களில் இரவுநேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அணைவரும் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது, இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:- மக்களுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர்கள் தொடர்ந்து அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்து வருகின்றனர். பொது இடங்களில் பலர் முக கவசம் அணியாமல் இருக்கின்றனர். 

இதனால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார். முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவர். மேலும் மாநிலத்தின் ஏற்றுமதி குறையும் என குறிப்பிட்டார். 

எனினும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் மக்களின் நன்மை கருதி முழு ஊரடங்கு அமல்படுத்தவேண்டிய நிலை இருக்கும் எனவும் உத்தவ் தாக்கரே கூறினார். 

newstm.in

Tags: