என்கிட்ட ஸ்மார்ட்போன் கிடையாது அண்ணா…. அதனால நான் இப்படி..!!
என்கிட்ட ஸ்மார்ட்போன் கிடையாது அண்ணா…. அதனால நான் இப்படி..!!
வெயில் காலத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது என்கிறோம். மழைக்கு மனசு ஏங்கி நிற்கிறது. அதே சமயம் ஓரிரு தினங்கள் தூரல் விழுந்தாலே நம்ம ஊரு ரோடு நிலைமை மழையை ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.
இந்நிலையில், மழை பெய்து, தனது கிராமம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், தன்னந்தனியே படகில், ஆர்வமாக விடாமுயற்சியுடன் மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்று வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பெய்த கனமழையால், அந்த மாணவி வசிக்கும் கிராமம் முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்தது.
இந்நிலையில்,11ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா சஹானி, ஏற்கெனவே கொரோனாவால் பள்ளிகள் மாத கணக்கில் மூடப்பட்டிருந்த நிலையில், இப்போது தான் திறந்திருக்கிறார்கள். மேலும் வகுப்புகளை தவற விடக்கூடாது என்று வெள்ள நீரில் மெதுவாக தானே தன்னந்தனியாக படகை செலுத்திக் கொண்டு, பள்ளிக்கு சென்று வருகிறார்.
என்னிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. அதனால் என்னால் வகுப்புகளை ஆரம்பத்தில் இருந்தே கவனிக்க முடியவில்லை. பள்ளிக்கு சென்று படித்தால் தான் விடுபட்ட பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் அந்த மாணவி. நம்ம ஊரு பெற்றோர்கள் வைரலாகும் இந்த புகைப்படத்தைக் காட்டி, தங்களது பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.