எனக்கு கொரோனா இருக்கு.. மனைவியிடம் இருந்து தப்பிக்க புதுமாப்பிள்ளை செய்த காரியம் !!
எனக்கு கொரோனா இருக்கு.. மனைவியிடம் இருந்து தப்பிக்க புதுமாப்பிள்ளை செய்த காரியம் !!
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் மனிதர்களில் சிலர் இதே கொரோனாவை வைத்து தங்களுக்கு தேவைக்கு ஏற்ப மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதாரணத்திற்கு, தற்போது பலரும் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டும், தனக்கு கொரோனா இருப்பதாகவும் கூறி ஆபிஸ்க்கு டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஆனால் மனைவியிடம் இருந்து சிறிது காலம் பிரிந்து தனியாக வாழ வேண்டும் என நினைத்து ஒருவர் கொரோனாவை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
த்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிறிது காலம் மனைவியை பிரிந்து வாழ திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் இருந்து கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்த அந்த 26 வயது இளைஞர், வேறு ஒருவரின் பெயருக்கு பதிலாக தன்னுடைய பெயரை மோசடியாக அதில் எடிட் செய்துள்ளார். பின்னர் அதனை தன்னுடைய மனைவிக்கும், தனது தந்தைக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவைத்துவிட்டு தலைமறைவானார்.
எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், எங்கு இருக்கிறார் என எதுவும் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. பின்னர், கொரோனா பாசிட்டிவ் ரிப்போர் அளித்த தனியார் பரிசோதனை மையத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது தான் போலி என்பது தெரியவந்தது.
அதே நேரத்தில் தனியார் பரிசோதனை மையத்தினர், 26 வயது இளைஞரின் மோசடி குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருக்கின்றனர்.இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இளைஞருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் போலீசில் சிக்கினார்.
newstm.in