ஐ லவ் யூ என மெசேஜ்..! -நண்பரின் காதலால் சேலம் மெக்கானிக்குக்கு நேர்ந்த கொடூரம்

ஐ லவ் யூ என மெசேஜ்..! -நண்பரின் காதலால் சேலம் மெக்கானிக்குக்கு நேர்ந்த கொடூரம்

Update: 2020-03-01 13:33 GMT

இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் காதல் மெசேஜ் அனுப்பியதால் சேலம் அருகே கொடூரமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

சேலம் அருகே சந்தியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு செல்போனில் 'I Love You' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், இது குறித்து தனத உறவினரான ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்ரீநாத்தை தாக்கியுள்ளார்.

காயமடைந்த ஸ்ரீநாத் இரு சக்கர வாகன பட்டறை உரிமையாளரான மகேஷ் என்பவரிடம் ரமேசும் அவரது கூட்டாளிகளும் தன்னை தாக்கியதாகக் கூறியுள்ளார். பின்னர் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை அழைத்து, ஸ்ரீநாத் மீது தாக்குதல் நடத்தியது குறித்து மகேஷ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் மல்லூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் மகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாழம்பூ ஏரி பகுதியில் மகேஷை, ரமேசும் அவரது கூட்டாளிகளும் வழிமறித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், மகேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து மகேஷின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் காவல் நிலைய போலீசார் மகேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரவி, விஜயகுமார், ஜீவா, சுந்தரம், சபரி, சக்தி ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம்பெண்ணுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் இரு சக்கர வாகனப் பட்டறை உரிமையாளர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:    

Similar News