நடிகைகளை படுக்கைக்கு அனுப்பாததால் நீக்கப்பட்டேன்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்..!

நடிகைகளை படுக்கைக்கு அனுப்பாததால் நீக்கப்பட்டேன்.. தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்..!

Update: 2021-07-30 14:22 GMT

“தயாரிப்பாளரின் பாலியல் தேவைகளுக்கு நடிகை மற்றும் துணை நடிகைகளை  அழைத்துச் செல்லாததால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன்” என,  இயக்குநர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

‘மாயமுகி’ என்ற திரைப்படத்தை ரவிச்சந்திரன் என்பவர் இயக்குவதாகவும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லி பாபு என்பவர் அதை தயாரிப்பதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் படப்பிடிப்புகள் கடந்த 2019ம் ஆண்டு துவக்கப்பட்டு கதாநாயகியாக மனோ சித்ராவும், கதாநாயகனாக ரவிதேஜா வர்மாவும் நடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், “மாயமுகி படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலத்தில் இயக்குநர் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்களை தயாரிப்பாளர் டில்லி பாபு எடுத்துச் சென்றுவிட்டார். அத்துடன், படத்தின் மீதி பகுதியை வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்கி வருகிறார்” என, ‘மாயமுகி’ படத்தின் இயக்குநர் ரவிச்சந்திரன், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து பத்திரிகையாளர்களிடம் இயக்குநர் ரவிச்சந்திரன் கூறுகையில், “படத்தின் வேலைகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் படத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை தயாரிப்பாளர் டில்லி பாபு திருடிச் சென்று விட்டார். மேலும், என்னுடைய படத்தில் வைக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள் மற்றும்  கதையின் சில பகுதிகளை எடுத்து வேறு படத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, படத்தில் நடிக்கக் கூடிய கதாநாயகி மற்றும் துணை நடிகைகளை தயாரிப்பாளர் டெல்லி பாபுவின் பாலியல் தேவைகளுக்கு நான் அழைத்துச் செல்லாததால் ‘மாயமுகி’ படத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்” என, பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதே போன்று கடந்த 5ம் தேதி, “மாயமுகி படத்துக்காக போடப்பட்ட இசை ஹார்ட் டிஸ்க்குகளை தயாரிப்பாளர் டில்லி பாபு திருடிச் சென்று விட்டார்” என, இந்தத் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஜெயபாலா என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News