நான் முதலமைச்சர் ஆவேன்.. கட்சி தொடங்கும் முன்பே முதல்வரின் சகோதரி அதிரடி அறிவிப்பு !!

நான் முதலமைச்சர் ஆவேன்.. கட்சி தொடங்கும் முன்பே முதல்வரின் சகோதரி அதிரடி அறிவிப்பு !!

Update: 2021-04-17 16:30 GMT

ஒன்றுபட்ட ஆந்திர மாநில முதல்வராக கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அதன்பின்னர் 2009ல் நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் அவா் உயிரிழாந்தார். 

அதன்பின்னர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றிபெற்றார். அந்த வகையில், ஆந்திர முதல்வராகவும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். அந்த தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வருவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அவரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி. 

இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷா்மிளா தெலங்கானா மாநிலத்தில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் ஏற்கனவே இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் மீண்டும் தனது தந்தையின் ஆதரவாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஷா்மிளா புதிய கட்சியைத் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்முடிவில் புதிய கட்சி தொடங்கும் தேதியை அவர் அப்போது அறிவித்தார்.

அதன்படி அவரது தந்தையின் நினைவு நாளான ஜூலை 8ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக தெரிவித்தார் ஷர்மிளா ரெட்டி. மேலும், அன்றைய தினமே கட்சியின் பெயர், கொடி, கொள்கையை அறிவிப்பதாகவும் கூறினார். எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில், அரசியலில் புதிதாக அடியெடுத்து வைக்க உள்ள அவர், தெலுங்கானாவில் வேலையில்லாத 1.91 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என்று வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஷர்மிளாவின் தாயாரும், மாநிலம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டுனர்.
 


இதனிடையே, இந்திரா பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவரது ஆதரவாளர்கள் பலரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஐதராபத்தின் வேறு பகுதியில் உள்ள லோட்டஸ் பூங்காவில் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை வெளியே விடும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நாள் தான் தெலங்கானா முதல்வராவேன், அப்போது நான் கோரிக்கை வைத்து போராடும் இளைஞர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்குவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News