இளம்பெண்களை மிரட்டிக் கற்பழித்த போலீசார்!! ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்த கொடூரம்!!

'விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்' - இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறையினர்..;

Update: 2020-02-18 13:29 GMT

உத்தரபிரதேசத்தில் ஆண் நண்பர்களுடன் இருந்த இளம்பெண்களை போலீசார் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூமை நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஹோட்டல் அறைக்குச் சென்றார்கள். அப்போது அங்கே வந்த சில போலீஸ்காரர்கள் அந்த பெண்களிடம் விபச்சாரம் செய்கிறீர்களா? என்று விசாரித்துள்ளனர். மேலும் போலீசார் மிரட்டும் வகையில் பேசியதால் பயந்து போன இரண்டு இளைஞர்களும் ஓடிவிட்டனர். அதன்பிறகு போலீஸ்காரர்கள் 2 இளம்பெண்களையும் மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அப்போது எங்களை விட்டு விடும்படி கெஞ்சியும் அவர்கள் விடாமல் கொடுமை செய்தார்கள் எனவும் பிறகு ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றம் நடந்த ஹோட்டல் அறையையும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் இரண்டு போலீசாரையும் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கும்  போலீசிடமும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கோரக்நாத் காவல் நிலையத்தில் அந்த இரண்டு போலீசார் மீது கும்பல் கற்பழிப்பு உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News