"ஊரடங்கு முடிந்ததும் வந்துவிடுவேன்"... அடுத்த ஆடியோ வெளியிட்டார் சசிகலா !!

"ஊரடங்கு முடிந்ததும் வந்துவிடுவேன்"... அடுத்த ஆடியோ வெளியிட்டார் சசிகலா !!

Update: 2021-06-21 12:51 GMT

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா தற்போது அதிமுகவை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளார். இதை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக, அதிமுக தொண்டர்களிடம்பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியானதால் கோபமடைந்த ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி, அதை நடைமுறைப்படுத்தினர்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சின் இந்த மிரட்டலுக்கு சசிகலா அஞ்சுவதாக இல்லை. தொடர்ந்து தொண்டர்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில், திருவாரூரைச் சேர்ந்த விஷ்வ கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், “அதிமுக நிர்வாகிகள் பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் பேசுவதைப் பார்த்தால், தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு பயத்தில் இருப்பது போல் தான் தெரிகிறது. தொண்டர்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்ததும் வந்துவிடுவேன், கவலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News