உன்னை தான் திருமணம் செய்வேன்.. ஒரே வார்த்தையை கூறி 12 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!
உன்னை தான் திருமணம் செய்வேன்.. ஒரே வார்த்தையை கூறி 12 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!
தற்போதைய காலக்கட்டத்தில் வீடு தேடிச்சென்று பெண் பார்ப்பதை விட இணையதளத்தில் வரன்பார்ப்பது அதிகரித்துவிட்டது. வீட்டில் இருந்த இணையம் மூலம் பெண், மாப்பிள்ளைகளை பார்த்துவிடுகின்றனர். இதனால் அவர்களின் உண்மையான பின்புலம் என்ன? குடும்ப நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் திருமணத்திற்கு பிறகு வரும் பிரச்னைகள் ஏராளம்.
அந்த வகையில் மும்பையில் ஒரே நபர் பல பெண்களை நாசம் செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கரண் குப்தா என்பவர் மேட்ரிமோனியல் இணையத்தளத்தை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. ஒரே நபர் மீது அதிக புகார் வந்ததையடுத்து அவரை கடந்த சில மாதங்களுக்கு மேலாக போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 37வயதான கரண் குப்தா மும்பையில் ஹேக்கராக இருந்துள்ளார்.
கரண் குப்தா மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் பார்ப்பது போல் தனது புரோபைலை பதிவு செய்வார். நல்ல வசதியான பெண்களை டார்க்கெட் செய்து திருமணம் செய்துக்கொள்ள தொடர்பு கொள்ளுவார். மேலும் இவரது புரோபைலை பார்த்து பெண்களும் தொலைபேசியில் அழைப்பர். அதன்பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவார். உங்களுடன் தனியாக பேசவேண்டும் வெளியில் பேசலாமா எனக் கேட்பார்.
தனியாக பேசினால் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளலாம் என நினைக்கும் பெண்கள் பப் அல்லது ரெஸ்டாரண்ட்களுக்கு இவரது அழைப்பின் பேரில் வருவார்கள். அவ்வாறு வரும் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதன்பின் அந்த மேட்ரிமோனியல் சைட்டில் இருந்து புரோபைல் நீக்கிவிடுவார். அவரது மொபலை எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் என வரும். அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண்கள் உணர்வார்கள். தற்போது மாப்பிள்ளை பார்ப்பதால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் திருமணத்தில் பிரச்னை ஏற்படும் என பெண்கள் வெளியே கூறவில்லை.
ஒவ்வொரு முறையும் இதேபாணியை கையாண்டுள்ளார். அவர் பயண்படுத்தும் மொபைல் எண்ணும் அவரது பெயரில் இருக்காது. போலி முகவரியில் வாங்கிய மொபைல் எண்களை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில் இதுவரை 12 பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலர் புகார் அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in