சார்பட்டா பரம்பரை படத்திற்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்.. நடிகர் நாசர் உருக்கம் !!
சார்பட்டா பரம்பரை படத்திற்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்.. நடிகர் நாசர் உருக்கம் !!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சார்பட்டா பரம்பரை. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறனர். குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைத்து வகைகளிலும் பாராட்டு பெற்று வருகிறது.
ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மா,வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி, ரங்கன் வாத்தியார் போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை இயக்குநர் பா.ரஞ்சித் வடிவமைத்திருப்பார்.
இந்த நிலையில் நடிகர் நாசர், சார்பட்டா பரம்பரை படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படியொரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு, என்று உருக்கத்துடன் வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நாசரின் மனைவி கமீலா.
Nasser’s note to @beemji pic.twitter.com/aeEx0cLmoj
— Kameela (@nasser_kameela) July 26, 2021
newstm.in