10 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடு உறுதி.. சுகாதாரத்துறை தகவல்..!

10 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடு உறுதி.. சுகாதாரத்துறை தகவல்..!

Update: 2021-12-23 18:39 GMT

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலமாக தமிழகத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அதிலும் சென்னையில் 26 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் மட்டும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 10 விழுக்காட்டுக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மூலம் தொற்று பரவலை குறைக்க முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News