ஃபேஸ்புக் பார்த்தால் பளார்.. சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் எடுத்த CEO !!

ஃபேஸ்புக் பார்த்தால் பளார்.. சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் எடுத்த CEO !!

Update: 2021-11-12 20:57 GMT

ஃபேஸ்புக் பார்த்தால் பணியாளரை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்திய நடவடிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் மூழ்கி கிடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இளைஞர்களின் வேலைத்திறன், மனநலம், எதிர்காலம் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவர்கள் தங்கள் செல்போனில் சமூக வலைதளங்களில் மூழ்குவதோடு அலுவலகத்திலும் இது தொடர்கிறது. ஆனால் இதனை நூதன முறையில் நிறுத்தி சாதித்துள்ளார் ஒருவர்.

PAVLOK ஃபிட்னெஸ் பேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கருமான மனீஷ் சேத்தி, தான் அதிகமாக ஃபேஸ்புக் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதற்காக தான் ஃபேஸ்புக் பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் ‘பளார்’ என அறைவதற்காக 8 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 600 ஊதியத்தில் பெண் ஒருவரை பணியில் அமர்த்தியுள்ளார்.

அதாவது, மணீஷ் சேத்தி, ஃபேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் அவரை அறைவதுதான் அப்பெண்ணின் ஒரே வேலை. இதற்காகவே தனது இருக்கைக்கு அருகிலே அப்பெண்ணுக்கும் தனி இருக்கை கொடுத்து கண்காணிக்க வைத்துள்ளார்.

இந்த விஷயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னர் அவரது வேலையில் கவனம் அதிகரித்து, அவரது நிறுவனம் வெகுவாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மணீஷ் ஃபேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்த்த அந்தப் பெண் அறை விடுவது குறித்த பதிவு வைரலாகி வருகிறது. அதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார். இதனாலேயே இன்றளவும் இந்த ட்விட் உலா வருகிறது.


newstm.in


 

Tags:    

Similar News