மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்..!!
மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்..!!;
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இவர் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், இவரை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.