நான் ஃபேஸ்புக்கில் இல்லை.. போலிப் பக்கம் குறித்து பிரபல நடிகை விளக்கம் !!

நான் ஃபேஸ்புக்கில் இல்லை.. போலிப் பக்கம் குறித்து பிரபல நடிகை விளக்கம் !!

Update: 2021-04-25 09:24 GMT

தன் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் போலி ஃபேஸ்புக் பக்கம் குறித்து நடிகை அதுல்யா ரவி விளக்கம் அளித்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் பக்கம் ஆரம்பிப்பது, அந்தப் பிரபலங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு செய்தி அனுப்புவது, பணம் பறிக்க முயற்சி செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக இணையத்தில் குற்றங்கள் தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகின்றன. ‘

இது தமிழ் திரையுலகினர் மட்டும் அல்லல சர்வதேச அளவில் பல பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உள்ளது. பின்னர் அவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்து ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்த லிஸ்ட்டில் தற்போது நடிகை அதுல்யா ரவி சிக்கியுள்ளார். காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அதுல்யா ரவி. தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுல்யாவின் பெயரில் போலியாக ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு அவரின் நண்பர்களுக்கு அதிலிருந்து தனிப்பட்ட செய்திகள் சென்றிருக்கின்றன. இதனை அறிந்த பலரும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறிதது அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், என் பெயரில் ஃபேஸ்புக்கில் போலியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து, தனிப்பட்ட முறையிலும், திரையுலகிலும் எனக்குத் தெரிந்த நபர்களுக்கு ஏன் செய்தி அனுப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமான செயல். ஏற்கெனவே இதுகுறித்துப் புகார் அளித்துவிட்டேன்.

நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பக்கத்தைப் பற்றிப் புகார் கொடுங்கள், என்று அதுல்யா பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து அதுல்யாவின் ரசிகர்கள் பலர் இந்தப் பக்கத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் அளித்துள்ளனர். விரைவில் அந்த பக்கம் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


newstm.in


 

Tags:    

Similar News