சுல்தான் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சுல்தான் படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Update: 2021-03-15 11:53 GMT

சுல்தான் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் பாடல் இன்று மாலை 5.30 மணியளவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரெமோ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம் சுல்தான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்கிறார். அவருடைய அறிமுகத்தை எதிர்நோக்கி தமிழக இளைஞர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இதனுடைய வெளியீடு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சுல்தான் படத்தில் இடம்பெற்றுள்ளன முதல் இரண்டு பாடல்களுக்கான சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவதாக வெளியான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தது ஸ்வீட் சர்பரைஸாக ரசிகர்களுக்கு அமைந்தது.

தற்போது சமூகவலைதளங்களில் அந்த பாடலுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுல்தான் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்படுகிறது. “எப்படி இருந்த நாங்க” என்று துவங்கும் இந்த பாடல் மாலை 5.30 மணியளவில் நேரடியாக யூ-டியூப்பில் வெளியாகிறது. இந்த பாடலுக்கு நிச்சயம் வரவேற்பு அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது. 


 


 

Tags:    

Similar News