தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறதா?... அதுவும் இவ்வளவு தொகையா?
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறதா?... அதுவும் இவ்வளவு தொகையா?;
தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் ரூ. 15 ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்காததால் தமிழக மின்சாரம வாரியம் 300 % மின்கட்டண உயர்வை சந்திக்கவுள்ளதாகவும் தமிழ்நாடு பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மின்சார வாரியம் தற்போது ஒரு லட்சத்துக்கு 33 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தனியார் உற்பத்தியாளர்கள், காற்றாலை உற்பத்தியாளர்களிடம் இருந்து வர வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் கோடி நிலுவை தொகை இதுவரை வாரியத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.
மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற வேண்டிய 15 ஆயிரம் கோடியினை வாரியம் பெறாவிட்டால், வரும் ஆண்டில் தமிழக மக்கள் 300% மின்கட்டண உயர்வை நிச்சயம் சந்திக்க நேரிடும் என தெரிக்கப்படுகிறது. இப்போதுள்ள மின்கட்டண தொகையில் இருந்து கட்டண உயர்வை மேலும் அதிகப்படுத்தினால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in