பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

Update: 2022-01-14 11:37 GMT

தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2.58 லட்சம் மாணவ - மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் பள்ளிகளில் சரியாக பதிவு செய்யப்படாதது தெரியவந்துள்ளது.

எனவே, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவ - மாணவியரின் விவரங்களை பட்டியலாக தயாரித்து வரும் 25-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறையில் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Similar News